‘இன்று நேற்று நாளை’ – ஜுன் 12ல் இசை வெளியீடு

“அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும், வில்லா (பிட்சா 2), முண்டாசுப்பட்டி, சரபம், எனக்குள் ஒருவன்” ஆகிய படங்களைத் தயாரித்த சீ.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், கே.ஈ. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான முறையில் புதிய கதைக் களத்துடன் தயாரித்துள்ள படம் ‘இன்று நேற்று நாளை’.

சொந்தத் தொழில் தான் செய்வேன் யாரிடமும் கை கட்டி வேலை செய்யமாட்டேன் என்ற கொள்கையில் வாழும் இளங்கோ என்ற கேரக்டரில் விஷ்ணுவும், அரை குறை ஜோதிடனாகப் பிழைப்பு நடத்தும் புலி வெட்டி ஆறுமுகம் கேரக்டரில் கருணாகரனும் நடித்துள்ளார்கள். இவர்கள் இருவரும் தங்கள் கையில் கிடைக்கும் டைம் மிஷினை வைத்துக்கொண்டு ஏற்படுத்தும் பிரச்சனையை அதே டைம் மிஷின் உதவியோடு தீர்ப்பதே இன்று நேற்று நாளை’ படத்தின் கதை.

விஷ்ணுவிற்கு ஜோடியாக ‘அமர காவியம்’ படத்தில் நடித்த மியா ஜார்ஜ் நடிக்கிறார். இப்படத்தை ரவிக்குமார் இயக்கி வருகிறார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார். வசந்த் ஒளிப்பதிவை செய்கிறார்.

இப்படத்தின் இசை வெளியிடு ஜு 12ம் தேதி நடைபெற உள்ளது.

Read Previous

சிம்பு, மிகப் பெரும் திறமைசாலி – கௌதம் மேனன்

Read Next

‘காக்கா முட்டை’க்கு ஒரு விசில் போடு…

Most Popular