‘காக்கா முட்டை’க்கு ஒரு விசில் போடு…

‘காக்கா முட்டை’ படத்தில் நடித்துள்ள சிறுவர்கள் ரமேஷ், விக்னேஷ் இருவரும் கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர்கள்.

அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் படத்தை வெளியிட்டுள்ள ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் அந்த ஏற்பாட்டைச் செய்தது. இயக்குனர் மணிகண்டன் சிறுவர்களை அழைத்துக் கொண்டு மும்பை சென்றார்.

அங்கு தோனியை சிறுவர்கள் ரமேஷ், விக்னேஷ் இருவரும் சந்தித்தனர். தோனி அவர்களை வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் படத்தில் அவர்களின் நடிப்பைப் பற்றியும் பாராட்டிப் பேசியுள்ளார்.

சிறுவர்கள் ரமேஷ், விக்னேஷ் இருவரும் தோனியைச் சந்தித்ததைப் பற்றி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

“தோனி எங்களிடம் அன்பாகவும், நட்பாகவும் பழகினார். எங்களைப் பாராட்டிக் கட்டித் தழுவிக் கொண்டார். அவரைச் சந்தித்தன் மூலம் எங்களது கனவு நனவானது,” என ரமேஷ் தெரிவித்தான்.

“நான் தோனி சார் மற்றும் சென்னை சூப்பர் கிங்-ன் தீவிர ரசிகன். அவரை சந்திக்கும் போது முதலில் பயமாக இருந்தது. ஆனால், அவர் மிகவும் ஜாலியாகப் பழகினார். தோனியிடம் பேசிக் கொண்டிருக்கிறோமா என என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்,” என விக்னேஷ் தெரிவித்தான்.

 

Read Previous

‘இன்று நேற்று நாளை’ – ஜுன் 12ல் இசை வெளியீடு

Read Next

‘அசத்தப் போவது யாரு’ ராஜ்குமார் இயக்குனராகும் படம்…

Most Popular