மூன்று ஜோடிகளுடன் தமிழில் அறிமுகமாகும் மகேஷ் பாபு

பிவிபி நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கும் படம் ‘பிரம்மோற்சவம்’.

இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு தமிழில் நேரடியாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், பிரணீதா நடிக்கின்றனர்.

தெலுங்கில் குடும்பப் பாங்கான திரைப்படங்களை இயக்கி நல்ல பெயரைப் பெற்றுள்ள ஸ்ரீகாந்த் இந்தப் படத்தை இயக்குகிறார்.

சத்யராஜ், ஜெயசுதா, ரேவதி, நரேஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள்தான் பணிபுரிகின்றனர், ஒளிப்பதிவை ரத்னவேல், படத் தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத், கலையை தோட்டா தரணி, இசையை மிக்கி ஜே மேயர் ஆகியோர் செய்ய உள்ளனர்.

2015 பொங்கல் அன்று இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Read Previous

Velubro – Nayagan Returns 2015 – Official Trailer

Read Next

Mahesh Babu to romance three girls

Most Popular