‘புலி’ படத்தில் விஜய்யுடன் முதன் முறையாக ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்.
நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடுவதிலும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். ஜோடி என்றால் சிலருக்குப் புரியாது, அதாவது இருவரும் சேர்ந்து ஒரு டூயட் பாடலைப் பாடியிருக்கிறார்கள்.
சமீபத்தில் தான் நடித்த படங்களில் விஜய் பாடிய, “கூகுள் கூகுள்…, வாங்கண்ணா வணக்கங்கன்னா…., கண்டாங்கி…, செல்ஃபி புள்ள…” ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.
அந்த வரிசையில் விஜய் , ஸ்ருதிஹாசன் இணைந்து பாடிய பாடலும் இடம் பெறும் என்கிறார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்.
நீண்ட காலத்திற்குப் பிறகு தாங்கள் பாடிய பாடல்களை தாங்களே நடிக்கும் பெருமை விஜய் – ஸ்ருதிஹாசன் ஜோடிக்குக் கிடைத்துள்ளது.