நிஜ வாழ்க்கையில் சிகரெட் பிடிக்க மாட்டேன் – தனுஷ்

‘மாரி’ படத்தின் முதல் டீசர் மே மாதம் வெளியிடப்பட்டது. அதில் தனுஷ் சிகரெட் பிடித்துக் கொண்டே ஒரு ஜீப்பின் பின்னால் வருவது போல் இடம் பெற்றிருந்தது.

இதே போல ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்ட போது தனுஷ் சிகரெட் பிடிக்கும் புகைப்படங்களே வெளிவந்தன. அவை இரண்டும் அப்போது கொஞ்சம் சர்ச்சையை ஏற்படுத்தின.

தனுஷ், இன்று குழந்தைகள் விரும்பும் ஒரு ஹீரோவாகவும் மாறிவிட்டார். ‘ஒய் திஸ் கொலை வெறியும், டங்கா மாரியும்’ அவரை குழந்தைகளிடமும் கொண்டு போய் சேர்த்துவிட்டன.

இப்போது ‘மாரி’ படத்தில் புகை பிடிக்கும் காட்சியும், ‘செஞ்சிருவேன்’ என்று சொல்லும் வசனமும் குழந்தைகளையும் பாதிக்காதா என்று இன்று நடைபெற்ற ‘மாரி’ பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த தனுஷ், “நான் இதற்கு முன் நடித்த ‘அனேகன்’ படத்தில் ஒரு காட்சியில் கூட புகை பிடிக்கவில்லை. ‘மாரி’ படத்தில் என் கேரக்டர் ஒரு லோக்கல் தாதா. அந்த கேரக்டர் சிகரெட் பிடிக்க மாட்டான், தண்ணியடிக்க மாட்டான்னா கொஞ்சம் இடிக்கும்.

நிஜ வாழ்க்கையில் நான் சிகரெட் எல்லாம் பிடிக்க மாட்டேன். என்னை யாராவது இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கணும்னா என்னோட நிஜ வாழ்க்கையை எடுத்துக்குங்க.

‘செஞ்சுருவேன்’ன்னு டயலாக்குலாம் வச்சிருக்கீங்களே, அதையெல்லாம் ரவுடிங்கதான் பேசுவாங்க. இப்ப குழந்தைகளும் அந்த வார்த்தையை பேசுறாங்க. உங்களுக்கு சமூகப் பொறுப்பு இல்லையா என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு,

“நீங்க ரொம்ப பெரிய பெரிய விஷயம் பத்தியெல்லாம் கேக்கறீங்க சார், எனக்கு அவ்வளவு அறிவுலாம் கிடையாது. என் அறிவு சின்ன அறிவு. ஒரு புக் கொடுப்பாங்க, அதுதான் ஸ்கிரிப்ட் புக். அதுல டயலாக் இருக்கும், நான் என்னலாம் பண்ணனும்னு இருக்கும். அதை அப்படியே செஞ்சிட்டுப் போயிடுவேன், அந்த செஞ்சிருவேன்தான் எனக்குத் தெரியும். அதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது.

நீங்க பெரிய பெரிய கேள்விலாம் கேக்கறீங்க, அந்த அளவுக்கு எனக்கு வயசும் கிடையாது, பக்குவமும் கிடையாது சார்,” என வெளிப்படையான ஒரு பதிலை தனுஷ் அளித்தார்.

இதுக்கு மேல நாம வெளிப்படையா எழுதினால் நம்மள ஏதாச்சும் ‘செஞ்சிடுவாங்களோ’….?

Read Previous

வாசுவும் சரவணனும் ஒண்ணா கலாய்ச்சவங்க…

Read Next

‘மஞ்சள்’ படமே வருக…