பிரியதர்ஷன் படத்திற்கு ரகுமான் இசையா ? தயாரிப்பாளர் விஜய் விளக்கம்

தேசிய விருது பெற்ற ‘கஞ்சீவரம்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் பிரியதர்ஷன், பிரகாஷ்ராஜ், ஸ்ரியா ரெட்டி மீண்டும் இணைந்துள்ள புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கப் போவதாக கடந்த சில தினங்களாக செய்திகள் பரவிவந்தது.

அது குறித்து படத்தைத் தயாரிக்கும் இயக்குனர் விஜய் கூறியதாவது,

“எனது குரு பிரியதர்ஷன் சார் அவர்களின் மானசீகமான படம் இது. தேசிய, சர்வதேச தரத்திலான படத்திற்கு சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒருங்கிணைப்பின் அவசியத்தை அறிந்துள்ளோம்.

சர்வதேச அடையாளத்தை எதிர் நோக்கும் இப்படத்தில் எல்லைகளைத் தாண்டி உணர்வுகளைக் கொண்டு வரும் இசையும் அவசியம். தற்போது பிரியதர்ஷன் சார் படப்பிடிப்பிற்கான வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

முழு படப்பிடிப்பும் முடிந்த பின்னர் படத்தை ரகுமான் சாருக்கு காண்பிக்க இருக்கிறோம். படத்தைப் பார்த்த பிறகு அவருக்குப் பிடித்திருந்தால் இப்படத்திற்கு இசையமைப்பார்.

பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன், ஸ்ரியா ரெட்டி ஆகியோரது நடிப்பும், திறமை வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் பிரியதர்ஷன் அவர்களின் காட்சிகளுக்குப் பேருதவியாக இருக்கும்,” என விஜய் கூறுகிறார்.

Read Previous

இன்றைய காதலைச் சொல்லும் ‘குரங்கு கைல பூ மாலை’

Read Next

அந்தப் படம் மட்டும் வந்திருந்தால்…உதயாவின் ஆதங்கம்…