‘பாகுபலி 2’ செப்டம்பரில் ஆரம்பம்…

ராஜமௌலி இயக்கத்தில் மரகதமணி இசையமைப்பில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் தமிழ், தெலுங்கில் வெளிவந்த ‘பாகுபலி’ படத்தின் முதல் பாகம் 500 கோடி ரூபாயைக் கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே முதல் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போதே இரண்டாம் பாகத்தின் 40 சதவீதப் படப்பிடிப்புகளை முடித்து விட்டார்களாம்.

மீதமுள்ள காட்சிகளைப் படமாக்கத் திட்டமிடும் வேலைகளில் படக் குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பே ஆரம்பித்து விட்டார்களாம்.

இதனிடையே, ‘பாகுபலி 2’ படத்தின் உரிமையை வாங்க இப்போதே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.

தமிழில் மட்டுமல்லாது, ஹிந்தி, மலையாளம் என மற்ற மொழிகளில் டப்பிங் ஆகி வெளியான ‘பாகுபலி’ படத்தின் முதல் பாகம் படத்தை வாங்கிய அனைவருக்கும் லாபத்தைக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

Chandi Veeran – opens for good show

Read Next

Sayang Ku – Saahasam’- Single Release Promo