புதுமுகங்களுடன், பிரியங்கா மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெள்ளியன்று வெளியான ‘வந்தா மல’ படத்திற்கு ரசிகர்களிடையே செம வரவேற்பு இருப்பதாக இயக்குனர் இகோர் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
சென்னை நகரத்துப் பின்னணியில் ‘செயின் திருடர்களாக’ இருக்கும் நான்கு நண்பர்கள் எப்படி நாட்டைக் காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
“காதல், நகைச்சுவை என முற்றிலும் கமர்ஷியல் படமாக இந்தப் படத்தை உருவாக்கியிருந்தேன். பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல் அறிமுக நடிகர்கள், வளர்ந்து வரும் நாயகி என வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு பி அன்ட் சி ரசிகர்கள் மட்டுமல்லாது, மற்ற சென்டர் ரசிகர்களும் வரவேற்பு கொடுப்பதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்கள் தியேட்டர்களில் பலத்த ஆரவாரத்துடன் படத்தை ரசிக்கிறார்கள்,” என இயக்குனர் இகோர் தெரிவித்துள்ளார்.