வான்சன் மூவீஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஷான் சுதர்சன் தயாரிக்கும் படம் ‘சேதுபதி’.
விஜய் சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கி அருண் குமார் இந்தப் படத்தை இயக்க உள்ளார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ‘மதயானைக் கூட்டம்’ படத்தில் நடித்த எழுத்தாளர் வேலராமமூர்த்தி நடிக்கிறார்.
சட்டம், ஒழுங்கு பிரிவு காவல்துறை ஆய்வாளராக விஜய் சேதுபதி நடிக்கிறார். காக்கிச் சட்டைக்குரிய கம்பீரத்தையும், பெருமையயைம் வெளிப்படுத்தும் விதமாக இந்தப் படம் இருக்குமாம்.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, தினேஷ் கிருண்ணன் ஒளிப்பதிவு செய்ய, பாலசந்தர் கலை இயக்கத்தில், ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பில் இப்படம் உருவாகப் போகிறது.
செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.