சன் டிவியில் நாளை ‘புலி’ இசை வெளியீடு ஒளிபரப்பு

விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப், பிரபு, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, சத்யன், ரோபோ சங்கர், ஆலி மற்றும் பலர் நடிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘புலி’.

இப்படத்தின் இசை வெளியீடு ஆகஸ்ட் 2ம் தேதி சென்னையை அடுத்த மகாபாலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் மிகப் பிரம்மாண்டமாக நடந்தது.

திரையுலகினர் பலர் கலந்து கொண்டு வாழ்த்திய அந்த விழாவில் டி.ராஜேந்தரின் பேச்சு மிகவும் ஹைலைட்டாக அமைந்தது. அவருடைய புகழ்ச்சியான பேச்சைக் கேட்டு மிகவும் வெட்கப்பட்ட விஜய், மேடைக்கே சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தார்.

இதுவரை, அதைப் பற்றி கேட்டும், படித்தும் வந்த ரசிகர்கள் அதை டிவி மூலம் பார்த்து ரசிக்கலாம்.

நாளை சன் டிவியில் மதியம் 2.30 மணிக்கு ‘புலி’ இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

Read Previous

Rajini in ‘Salt N Pepper’ look

Read Next

‘அஞ்சி’ பைசா கூட வாங்காத ‘இஞ்சி இடுப்பழகி’…