டிரைலர் ‘லைக்’கில் மட்டும் ‘புலி’ சாதனை…

‘புலி’ படத்தின் டிரைலர் யு டியூபில் வெளியாகி 36 மணி நேரத்தைத் தொட உள்ளது. ஆனால், அதற்குள் 30 லட்சம் ஹிட்ஸைத் தொட உள்ளது.

அதே சமயம், அந்த டிரைலரை விரும்பி ‘லைக்’ கொடுத்தவர்களின் எண்ணிக்கையில் ‘என்னை அறிந்தால்’ டிரைலரை முந்தி விட்டது.

‘என்னை அறிந்தால்’ டிரைலரை இதுவரை ‘லைக்’கியவர்களின் எண்ணிக்கை 66,780. ‘புலி’ டிரைலரை இதுவரை ‘லைக்’கியவர்களின் எண்ணிக்கை 71,889.

டிரைலரைப் பொறுத்தவரையில் இதுவரை வெளிவந்த தமிழ்ப் படங்களின் டிரைலரைப் பொறுத்த மட்டில் ‘புலி’ சாதனை மிகப் பெரிய சாதனைதான்.

ஆனால், டீசரைப் பொறுத்தவரையில் ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசரை ‘லைக்’கியவர்களின் எண்ணிக்கைதான் இன்னும் முறியடிக்கப்படாத ஒரு சாதனையாக இருக்கிறது. அந்த டீசரை இதுவரை 95,314 பேர் ‘லைக்’கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘என்னை அறிந்தால்’ டீசரின் ‘லைக்’ தான் யு டியூப் இணையதளத்தில் அதிக பட்சமாக ஒரு தமிழ்ப் படத்தின் டீசரோ அல்லது டிரைலரோ வாங்கிய அதிகபட்ச எண்ணிக்கை.

‘புலி’ டீசர் இதுவரை வாங்கிய லைக்குகள் ‘71,076’. ஆக, ‘புலி’ டிரைலரோ, டீசரோ ‘என்னை அறிந்தால்’ வாங்கிய அதிக பட்ச லைக் சாதனையை முறியடிக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

குறிப்பு –  ‘டீசர்’ என்பதற்கும், ‘டிரைலர்’ என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அந்த வித்தியாசம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விழையும் சிலருக்காக…

‘டீசர்’ என்பது ஒரு விளம்பரத்தின் வசனங்களற்ற குறைவான அளவு சில வினாடிகள் ஓடக் கூடிய ஒரு வீடியோ.

‘டிரைலர்’ என்பது ஒரு விளம்பரத்தின் வசனத்துடன் கூடிய சில நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு வீடியோ.

‘புலி’ டிரைலர்

‘என்னை அறிந்தால்’ டிரைலர்

‘புலி’ டீசர்

‘என்னை அறிந்தால்’ டீசர்

 

Read Previous

ரஜினிகாந்த் விரும்பி சாப்பிடும் ‘சிரஞ்சீவி தோசை’…

Read Next

‘பாயும் புலி’ தெலுங்கு இசை விழாவில் ஆர்யா, கார்த்தி

Most Popular