‘காதல் தோல்வி’ படத்தைப் பாராட்டும் சிம்பு

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ் நடித்து கடந்த வாரம் வெளிவந்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் விமர்சன ரீதியாக விவாதிக்கப்பட்டு வந்தாலும், கமர்ஷியல் ரீதியாக வசூலை அள்ளி வருகிறது.

இந்தப் படத்தைப் பற்றி சிம்பு பாராட்டித் தள்ளியிருக்கிறார். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஒரு காதல் தோல்விப் படம். காதலில் தோல்வியடைந்தவர்களுக்குத்தான் காதலின் வலி என்னவென்று தெரியும்.

‘‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் வெளிப்படையாகச் சொல்லப்பட்டுள்ள இன்றைய தலைமுறை படம். படத்தை மிகவும் ரசித்தேன், வெற்றி பெற்றபடக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள். ஜி.வி.பிரகாஷ் இரண்டு வழிகளிலும் அவருடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார், இயக்குனரும் கூடத்தான்,” என சிம்பு பாராட்டியிருக்கிறார்.

‘ஹன்சிகா இல்லனா நயன்தாரா’ என்று டைட்டில் வைத்திருந்தால் சிம்பு இன்னும் அதிகம் பாராட்டியிருப்பாரோ ?

Read Previous

திரைப்பட விழாக்களில் ‘கிருமி’

Read Next

Simbu’s pat for TIN team

Most Popular