‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வந்த படத்தின் பெயர் அறிவிக்கப்படாமலே இருந்தது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்ததையடுத்து இன்று படத்தின் முதல் பார்வை, புதிய தலைப்புடன் வெளியிடப்பட்டது. படத்திற்கு ‘தங்க மகன்’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
இதே பெயரில் ரஜினி நடித்த படம் 1983ம் ஆண்டு வெளிவந்தது. மீண்டும் ரஜினிகாந்த் நடித்து சூப்பர் ஹிட்டாக ஓடிய ஒரு படத்தின் பெயரை தன்னுடைய படத்திற்கு தனுஷ் வைத்துள்ளார்.
இதற்கு முன் ‘பொல்லாதவன், படிக்காதவன், மாப்பிள்ளை” என ரஜினிகாந்த் நடித்த படங்களின் பெயரை தான் நடித்த படத்திற்கு தனுஷ் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்குப் பிறகு வேல்ராஜ் இயக்கும் இந்த ‘தங்க மகன்’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமந்தா, எமி ஜாக்சன், கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
விரைவில் ‘தங்க மகன்’ படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது.