‘கான்’ கைவிடப்படவில்லை – செல்வராகவன் மறுப்பு

செல்வராகவன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சிம்பு, கேத்தரின் தெரேசா, டாப்சி, ஜெகபதி பாபு மற்றும் பலர் நடிக்கும் ‘கான்’ படம் கைவிடப்பட்டதாக கடந்த சில நாட்களாக செய்திகள் கிளம்பின.

ஆனால், ‘கான்’ படம் கைவிடப்படவில்லை, தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என இயக்குனர் செல்வராகவன் சற்று முன் அறிவித்துள்ளார்.

‘‘கான்’ படம் பற்றி நிறைய வதந்திகளைக் கேள்விப்பட்டு வருகிறேன். அது பற்றிய சில விவரங்களைச் சொல்ல விரும்புகிறேன்.

ஒரு எழுத்து வடிவமாக ‘கான்’ படம் எனது மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். அதோடு எனது லட்சியத்திற்குரிய படமும் கூட. எங்களது பார்வைக்கும் நானும் எனது குழுவும் நியாயம் செய்ய வேண்டும்.

எங்களது குழுவும் நானும் படத்தை தற்காலிகமாக கிடப்பில் போட்டுள்ளோம். நாங்கள் அனைவருமே ஒரே பார்வையைத்தான் பகிர்ந்து கொள்கிறோம் என்பது சிறப்பான ஒன்று,” என அவர் தெரிவித்துள்ளார்.

அந்தத் தற்காலிக கிடப்பு என்பது எவ்வளவு நாட்களுக்கு என செல்வராகவன் எதுவும் தெரிவிக்கவில்லை.

Read Previous

அருள்நிதி நடிக்கும் ‘ஆறாது சினம்’

Read Next

Selvaraghavan explains why Kaan is shelved temporarily