‘கபாலி’ டிசைன் காப்பியடிக்கப்பட்டதா ?

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் ‘கபாலி’.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஆரம்பமாகி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படக் குழுவினல் மலேசியா சென்று படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

இதனிடையே, கடந்த மாதம் வெளியிடப்பட்ட ‘கபாலி’ படத்தின் இரண்டு டிசைன்களில் ஒரு டிசைன் காப்பியடிக்கப்பட்ட ஒன்று என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இணையதள பயன்பாட்டாளர்கள், ‘கபாலி’ படத்தின் டிசைன் எதிலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

2012ம் ஆண்டு பிலிப்பைன் மொழியில் வெளிவந்த ‘டிக்டிக் – தி அஸ்வான் க்ரோனிக்கல்ஸ்’ என்ற படத்தின் டிசைனிலிருந்து ‘கபாலி’ பட டிசைன் காப்பியடிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு டிசைன்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பது டிசைனைப் பார்க்கும் உங்களுக்கே தெரியும்.

இந்த டிசைன் உருவாக்கம் பற்றி ஏற்கெனவே சமூக வலைத்தளங்களில் ஒரு சர்ச்சை எழுந்திருந்தது. இதற்கான புகைப்படங்களை எடுக்க மலேசிய புகைப்படக் கலைஞரைப் பயன்படுத்தினார்கள் என்ற சர்ச்சை இருந்து வந்தது.

இப்போது இந்த ‘கபாலி’ டிசைனை உருவாக்கிய வின்சி ராஜ் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Read Previous

நானும் ரௌடிதான் – விஜய் சேதுபதி வியந்த விஷயம்…

Read Next

Nasser, Vishal assumed office