உன்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தனுஷ் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்க அனிருத் இசையமைப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் மற்றும் பலர் நடிக்கும் ‘நானும் ரௌடிதான்’ படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது.
படம் பற்றி இயக்குனர் விஜய் சேதுபதி வியந்து பேசியுள்ளார். அவரை வியக்க வைத்த விஷயம் எது என்பது குறித்து விஜய் சேதுபதி கூறியதாவது,
“இந்தப் படத்தோட ‘லுக்’ எப்படி ஃபிரஷ்ஷா இருக்கோ, அப்படித்தான் படமும் இருக்கும்.
நான் பார்த்து ரசிச்சி, ரசிகனா இருந்த அத்தனை பேரோடவும் வேலை பார்த்திருக்கேன். பார்த்திபன் சார், ராதிகா மேடம், மன்சூர் சார், அழகம் பெருமாள் சார், நயன்தாரா எல்லோரடவும் இப்படி ஒரு படத்துல நடிக்க வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி.
இந்தப் படத்தோட கதையை முதல்ல விக்கேன்ஷ சிவன் என்கிட்ட சொல்லும் போது ஃபிப்டி, ஃபிப்டியாதான் இருந்தது. அப்புறம் பலர் கிட்ட அவர் கதைய சொல்லிட்டு கடைசியா என்னைச் சந்திக்கும் போது கதை வேற விதமா வளர்ந்திருந்தது. அப்புறம் 100 மடங்கு வளர்ந்துதான் இப்ப படமா நிக்குது.
நான் நடிக்க கமிட் ஆகும் போது நயன்தாரா மட்டும்தான் கமிட் ஆகியிருந்தாங்க. இப்படி ஒரு பெரிய படமா அப்புறம் வரும்னு நினைக்கலை. அதுக்கு தனுஷ் சாருக்கு நன்றி. ‘புதுப்பேட்டை’ படத்துல நான் பார்த்த தனுஷ் சார் எப்படியிருந்தாரோ இப்பவும் அதே மாதிரிதான் இருக்காரு.
படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி எந்தப் பிரச்சனைனாலும் எனக்கு போன் பண்ணுங்கன்னு சொன்னாரு. நான் கடைசி நாள் ஷுட்டிங் போது, படம் முடிஞ்சிடுச்சின்னு போன் பண்ணி சொன்னேன். அவர் தயாரிப்பில் நடிச்சது சந்தோஷம்தான்.
இந்தப் படத்துல இன்னொரு விஷயம், தி கிரேட் கிரேட் கிரேட் அனிருத். நாங்க எல்லாரும் சேர்ந்து செஞ்ச வேலையை அனிருத் அப்படியே அம்பது சதவீதம் இன்னும் மாத்திட்டாரு. 2, 3 கோடி ரூபாய் செலவு பண்ணி பண்ண வேண்டியத அவருடைய பாடல்கள் மட்டுமே பண்ணியிருக்கு.
இந்தப் படத்துல நான் வியந்த விஷயம் என்னன்னா, படத்துல ஒரு காமெடி சீன் வரும், அப்புறம் உடனே ஒரு எமோஷனல் இருக்கும், அந்த எமோஷனல் உங்களை டச் பண்ணும். அந்த எமோஷனல்ல இருந்து மீள்றதுக்கு முன்னாடி, அப்புறம் நகைச்சுவை வரும். இதை விக்னேஷ் சிவன் எப்படி எழுதறார்னே தெரியாது.
நடிக்கும் போது இந்த ஸ்கிரிட்டோட மேஜிக் புரியலை. இந்தப் படத்துக்கு அப்புறம் விக்னேஷ் சிவன் பெரிய இடத்துக்குப் போவாருன்னு நம்புறேன்,” என விஜய் சேதுபதி வியந்து கூறினார்.