‘நானும் ரௌடிதான்’ – ஒரு ஜாலியான படம்

சிம்பு, வரலட்சுமி நடித்த ‘போடா போடி’ படத்திற்குப் பிறகு தனுஷ் தயாரிப்பில் ‘நானும் ரௌடிதான்’ படத்தை இயக்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

அனிருத் இசையமைப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ஆர்ஜே பாலாஜி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறியதாவது,

“நானும் ரௌடிதான் படம் ஒரு ஃபீல் குட், ஜாலியான ரவுடி படம்.

ரவுடியாகணும்னு ஆசைப்படறவரு விஜய் சேதுபதி. ஒரு சீரியசான பொன்னு நயன்தாரா.

இவங்க இரண்டு பேரும் ஒரு சந்தர்ப்பத்துல சந்திக்கிறாங்க. நயன்தாராவுக்கு ஒரு விஷயம் தேவைப்படுது. அதை விஜய் சேதுபதி செய்யணும்னு நினைக்கிறாரு.

ஆனால், அந்த விஷயத்தை செஞ்சி முடிக்க அவனுக்கு எந்தத் திறமையும் இல்லை. இருந்தாலும் அவன் அதை செய்து முடிக்கிறானா இல்லையாங்கறதுதான் இந்தப் படத்தோட கதை.

ஒரு எமோஷனலா கதை, அதை சீரியசா கொடுக்காம ஸ்கீரீன்ல பார்க்கும் போது ரசிகர்கள் சிரிச்சி ரசிக்கற மாதிரி உருவாக்கியிருக்கோம்,” என்கிறார் விக்னேஷ் சிவன்.

Read Previous

Big plans up their sleeve

Read Next

நானும் ரௌடிதான் – விஜய் சேதுபதி வியந்த விஷயம்…