ஆத்யன் – விமர்சனம்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராம் மனோஜ்குமார் இசை – ஹரி ஜி. ராஜசேகர் பாடல்கள் – உமாதேவி, ‘ஹைட்’ கார்த்திக் ஒளிப்பதிவு – எம். ஸ்ரீனிவாசன் படத் தொகுப்பு – குமரவேல் தயாரிப்பு – டி. ரஞ்சித்குமார் கதைச் சுருக்கம் ஃபேஸ்புக் மூலம் காதலியான சாக்ஷி அகர்வாலைச் சந்திப்பதற்காக ஜப்பானில் செட்டிலான அபிமன்யு சென்னைக்கு வருகிறார். அவருக்கு ‘ஜெட்-லாக்’கால் திடீரென தூங்குவதும், மயங்குவதுமான பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், காதலியைச் சந்திக்க முடியாத சந்தர்ப்பம் ஏற்படுகிறது. இதனிடையே, போதைப் பொருளைக் கடத்தும் லோக்கல் தாதா அபிமன்யுவைக் கடத்துகிறார். அவர் ஏன் அபிமன்யுவைக் கடத்துகிறார், அபிமன்யு தன் காதலி சாக்ஷியைச் சந்தித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. விமர்சனச் சுருக்கம் ‘ஜெட்-லாக்’ என்ற நேர மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை மையமாக வைத்து வந்துள்ள படம். புதுமையான கதையை யோசித்தவர்கள் விறுவிறுப்பான திரைக்கதையை யோசித்திருக்கலாம். லோக்கல் தாதா, போலீஸ் கூட்டணி என வழக்கமான விஷயத்தைக் கையாளாமல் புதிதாக எதையாவது யோசித்திருந்தால் முழுவதும் வித்தியாசமான படமாக அமைந்திருக்கும்.

Read Previous

பள்ளிக் கூடம் போகாமலே – விமர்சனம்

Read Next

விரைவில் இசை – விமர்சனம்