‘இஞ்சி இடுப்பழகி’ – சிறப்புத் தோற்றத்தில் சில நட்சத்திரங்கள்

பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் பிரகாஷ் இயக்கத்தில் மரகதமணி இசையமைப்பில் ஆர்யா, அனுஷ்கா, பிரகாஷ் ராஜ், ஊர்வசி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.

அழகு என்பது உடல் அமைப்பிலோ, தோற்ற பொலிவிலோ இருப்பது அல்ல. நம்முள் இருக்கும் நல்ல எண்ணம் தான் உண்மையான அழகு என்ற கருத்தை வலியுறுத்தும் இந்தப் படத்தில் குண்டான பெண்ணாக அனுஷ்கா நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தமிழ், தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த பல பிரபல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். நாகார்ஜுனா, ஜீவா, பாபி சிம்ஹா, ராணா டகுபட்டி, ஹன்சிகா, தமன்னா, ஸ்ரீதிவ்யா, ரேவதி ஆகியோர் சில காட்சிகளில் நடித்திருக்கிறார்கள்.

‘பாகுபலி, ருத்ரமாதேவி’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு அனுஷ்காவிற்கு முக்கியத்துவம் உள்ள படமாக இந்தப் படம் வெளிவர உள்ளது. அனுஷ்கா நடித்து அந்தப் படங்களின் வெற்றி ராசி இந்தப் படத்திற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘இஞ்சி இடுப்பழகி’ நவம்பர் 27ம் தேதி வெளிவருகிறது.

Read Previous

‘அத்லெட்’ ஆக அசத்தும் அதர்வா

Read Next

Jayam Ravi’s Miruthan for Pongal