ஈட்டி – விளையாட்டை மையப்படுத்திய கமர்ஷியல் படம்

குளோபல் இன்போடைன்மென்ட் மைக்கோல் ராயப்பன் வழங்க ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இயக்கத்தில் அதர்வா, ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஈட்டி’.

தமிழ்த் திரையுலகில் விளையாட்டை மையப்படுத்தி கமர்ஷியலாகவும் பயணிக்கும் முதல் படமாக இந்தப் படம் வெளிவர உள்ளது என்கிறார் படத்தின் இயக்குனர் ரவி அரசு.

‘‘ஈட்டி’ படம் விளையாட்டை மையப்படுத்திய ஒரு படம். பொதுவா விளையாட்டை மையப்படுத்தி தமிழ்ல வந்த பல படங்கள் ஒரு டாகுமென்டரி படம் போன்ற ஒரு உணர்வைக் கொடுத்திருந்தது.

இந்தப் படத்துல திரைக்கதைதான் ஹைலைட். விளையாட்டுங்கறது ஒரு டிராக்ல போகும், அன்டர் வேல்ர்டு விஷயம் ஒரு டிராக்ல போகும், இது இரண்டும் ஒண்ணு சேர்ற இடத்துலதான் ஹீரோவுக்கு ஒரு பிரச்சனை வரும். அதுல இருந்து அவர் எப்படி மீண்டும் ஆசிய விளையாட்டுப் போட்டியில கலந்துக்கிறாருங்கறதுதான் படத்தோட கதை.

விளையாட்டை மையமா வச்சி வர்ற படங்களை கமர்ஷியல் படமா எடுக்கத் தயங்குவாங்க. எனக்குத் தெரிஞ்சி முதல் முறையா இந்தப் படத்துல விளையாட்டை மையமா வச்சி அதை கமர்ஷியலான படமாவும் கொடுத்திருக்கிற படமா இந்தப் படம் அமையும்,” என நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் ரவி அரசு.

‘ஈட்டி’ படம் டிசம்பர் 4ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Read Previous

Eetti – Teaser

Read Next

Song leak scares Kabali crew