ஹிந்தித் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அக்ஷய் குமார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக 1 கோடி ரூபாயை வழங்கியுள்ளார்.
சென்னையின் மக்களின் நிலைமையை கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணிய அக்ஷய் குமார், இயக்குனர் பிரியதர்ஷனைத் தொடர்பு கொண்டுள்ளார். அவர் சுஹாசினி மணிரத்னத்தைத் தொடர்பு கொள்ளக் கூறியுள்ளார்.
சுஹாசினி மணிரத்னத்தின் வழிகாட்டுதலின்படி ஜெய்ந்த்ரா நிர்வாக அறங்காவலராக உள்ள பூமிகா அறக்கட்டளைக்கு ருபாய் 1 கோடி ருபாய் காசோலையை நடிகர் அக்ஷய் குமார் அளித்துள்ளார்.
பூமிகா அறக்கட்டளை சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெள்ளம் வந்த நாள் முதலே உணவு கொடுத்து வருகிறது.
ஏற்கெனவே ஹிந்தி நடிகரான ஷாரூக் கான் 1 கோடி ரூபாயும், தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் 2 கோடி ரூபாயும் கொடுத்து உதவியுள்ளார்கள். ஹிந்தி நடிகரான ஹிருத்திக் ரோஷன் 25 லட்ச ரூபாய் அளித்துள்ளார். தெலுங்கு நடிகர்களான அல்லு அர்ஜுன் 25 லட்சம், மகேஷ் பாபு 10 லட்சம், ஜுனியர் என்டிஆர் 10 லட்சம், ரவி தேஜா 5 லட்சம், கல்யாண் ராம் 5 லட்சம் வழங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன் 15 லட்சம், ரஜினிகாந்த் 10 லட்சம், சூர்யா குடும்பத்தினர் 25 லட்சம், விக்ரம் 10 லட்சம், விஷால் 10 லட்சம், தனுஷ் 5 லட்சம், சிவகார்த்திகேயன் 5 லட்சம் ரூபாயை வெள்ள நிவாரண நிதியாக நடிகர் சங்கத்திடம் அளித்துள்ளார்கள்.
நடிகைகளான சமந்தா 30 லட்சம், ஹன்சிகா 15 லட்சம், ஸ்ரீதிவ்யா 10 லட்சம் வழங்கியுள்ளனர்.
இன்னும் விஜய்யும், அஜித்தும் அவர்களுடைய வெள்ள நிவாரண நிதியைப் பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடாமலே இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மக்கள் மீதும் யார் பாசமாக இருக்கிறார்கள் என்று இப்போது சொல்லுங்கள்….?.