தோழா – காத்திருக்கும் இசையமைப்பாளர் கோபி சுந்தர்

பிவிபி சினிமா தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா மற்றும் பலர் நடித்துள்ள ‘தோழா’ படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

மலையாளத்தில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ள கோபி சுந்தர் தமிழ்த் திரையுலகில் இன்னமும் அறியப்படாத ஒரு இசையமைப்பாளராகவே உள்ளார்.

மலையாளத்தில் சுமார் 50 படங்களுக்கு இசையமைத்துள்ளார் கோபி சுந்தர். தமிழில் ‘பெங்களூர் நாட்கள், அஞ்சல, யாருடா மகேஷ், நந்தனம், பொய் சொல்ல போறோம்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். இருந்தாலும் ‘தோழா’ படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளார்.

இந்தப் படம் தமிழில் தனக்கு நல்லதொரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

‘தோழா’ படம் இம்மாதம் 25ம் தேதி வெளியாக உள்ளது.

Read Previous

பாராட்டு மழையில் ‘கோடை மழை’ நாயகி ஸ்ரீபிரியங்கா

Read Next

24 Tamil Movie – Kaalam Yen Kadhali – Lyrical Video Song