தீபிகா படுகோனுக்குப் பிடித்த தோசை

முதல் படத்தில் பார்த்த போது எப்படியிருந்தாரோ அதே போல இன்று வரை ‘ஸ்லிம்’ ஆக இருக்கிறார் பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன்.

‘கோச்சடையான்’ படத்தில் அவரை பொம்மையாக மட்டும் காட்டிவிட்டு தமிழ் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார்கள்.

அவர் மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்க மாட்டாரா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தீபிகா பார்ப்பதற்குத்தான் ஸ்லிம்மாக இருக்கிறார். ஆனால், சாப்பாடு என்று வந்தால் அமைதியாக இருக்க மாட்டாராம். அதுவும் பெங்களூருக்கு வந்தால் அம்மா சமைக்கும் விதவிதமான ஐட்டங்களை ஒரு கை பார்க்காமல் விட மாட்டாராம்.

அதிலும், தோசை, இட்லி, உப்புமா என்றால் தீபிகாவுக்கு கொள்ளைப் பிரியமாம். பெங்களூரில் எங்கெங்கு சுவையான தோசைகள் கிடைக்கும் என்பது கூட தீபிகாவுக்குத் தெரியுமாம்.

உடம்பைக் கட்டுக்குள் வைப்பதற்காக சாப்பிடாமல் எல்லாம் இருக்க மாட்டேன். உடற்பயிற்சி செய்து பின்னர் அதை கட்டுக்கொள் வைத்துக் கொள்வேன் என்கிறார் இந்த ‘தோசைப் பிரியை’….

Read Previous

‘தெறி’ – அமெரிக்க உரிமை 3 கோடி

Read Next

‘தில்லுக்கு துட்டு’ படப்பிடிப்பு நிறைவு…