‘தில்லுக்கு துட்டு’ படப்பிடிப்பு நிறைவு…

சந்தானம் நாயகனாக நடித்து வரும் ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.

தற்போது இறுதிக் கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சந்தானம் இன்று நடிகராக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கக் காரணமாக இருந்தது விஜய் டிவியில் அவர் நடித்த ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி.

அந்த நிகழ்ச்சியை இயக்கி சந்தானத்தை அதில் அறிமுகப்படுத்திய ராம்பாலா தான் ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் இயக்குனர்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது.

Read Previous

தீபிகா படுகோனுக்குப் பிடித்த தோசை

Read Next

It is a wrap for Dhilluku Dhuddu