‘வல்லவனுக்கும் வல்லவன்’ – டப்பிங் ஆரம்பம்

பாபி சிம்ஹா அவரது சொந்தப் பட நிறுவனமான அசால்ட் புரொக்சன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘வல்லவனுக்கும் வல்லவன்’.

அறிமுக இயக்குனர் விஜய் தேசிங்கு இயக்கும் இந்த அதிரடி திரில்லர் படத்தின் டப்பிங் இன்று ஆரம்பமானது.

‘கோ 2, ‘இறைவி’ ஆகிய இரண்டு படங்களிலும் பாபி சிம்ஹா நடித்து முடித்து விட்டார். இந்தப் படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இவற்றோடு ‘பாம்பு சட்டை’ படத்திலும் நாயகனாக நடித்து முடித்துள்ளார். இப்பட வெளியீடு தாதமாகி வருகிறது.

ஒவ்வொரு படத்திலும் பாபி சிம்ஹாவின் கதாபாத்திரம் பேசப்படும்படி அமைந்துள்ளதாம்.

Read Previous

‘டார்லிங் 2’ – டபுள் சந்தோஷத்தில் கலையரசன்

Read Next

மீண்டும் ஒரு காதல் கதை