மீண்டும் ஒரு காதல் கதை

மலையாளத்தில் மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘தட்டத்தின் மறையத்து’. இப்படம் தமிழில் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ என ரீமேக் செய்யப்படுகிறது.

SVD ஜெயச்சந்திரன் வழங்கும் இப்படத்தினை மித்ரன் R ஜவஹர் இயக்குகிறார். வால்டர் பிலிப்ஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மலையாளத்தில் நாயகியாக நடித்த இஷா தல்வார் தமிழிலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவரது இசையில் அருண் காமராஜ் எழுதிய ‘மை போட்டு மை போட்டு…’ என்ற பாடல், ஏப்ரல் 1 ம் தேதி வெளியாக உள்ளது.

இப்பாடல் திருமணச் சடங்கின் போது பாடப்படுவதாக அமைந்திருக்கிறது. இப்பாடலில் நிறைய பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். ‘

‘ஆடுகளம்’ படத்தின் ‘ஒத்த சொல்லால’ பாடல் புகழ், வேல்முருகனும் இந்தப் பாடலில் பாடியிருக்கிறார். இது அவரது முதல் மெலடிப் பாடல். இப்பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். இப்பாடலை கேரளாவில் படமாக்கியிருக்கிறார்கள்.

கலைப்புலி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் இப்படத்தினை உலகமெங்கும் வெளியிடுகின்றது

Read Previous

‘வல்லவனுக்கும் வல்லவன்’ – டப்பிங் ஆரம்பம்

Read Next

பிரபுதேவா – தமன்னா நடிக்கும் ‘காந்தா’

Most Popular