விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு ‘காந்தா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. பிரபுதேவா இப்படத்தைத் தயாரித்து நாயகனாகவும் நடிக்கிறார்.
தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது. அவர் நாயகனாக நடித்துள்ள ‘களவாடிய பொழுதுகள்’ படம் முடிந்தும் இன்னும் வெளிவராமலே முடங்கிப் போயுள்ளது.
இப்படம் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படம். அதனால்தான் படத்தில் தமன்னாவின் கதாபாத்திரப் பெயரான ‘காந்தா’ என்ற பெயரிலேயே படத்தின் தலைப்பையும் வைத்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
இப்படத்திற்கு தமன், ஜி.வி.பிரகாஷ் இருவரும் இசையமைக்கிறார்கள்.