‘டார்லிங் 2’ – டபுள் சந்தோஷத்தில் கலையரசன்

‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்ட நடிகராக மாறியவர் கலையரசன்.

இப்போது உயிரைக் கொடுத்து நடித்த ‘டார்லிங்’ படமும் அவருடைய திறமைக்கு விசிட்டிங் கார்ட்டாக அமைய, இப்போது டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார்.

காரணம், இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அவர் நடித்திருக்கும் ‘டார்லிங்-2’மற்றும் ‘ராஜா மந்திரி’ ஆகிய இரண்டு படங்கள் வெளிவர இருக்கின்றன.

அது மட்டுமல்ல ரஜினிகாந்த் நடிக்கும் ‘கபாலி’ படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கலையரன்.

‘டார்லிங் 2’ படத்தில் கலையரசனும் கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார். அந்தப் பட அனுபவம் பற்றி அவர் கூறியதாவது,

’டார்லிங்–2’ படத்தைப் பொறுத்தவரை ஒரு அறிமுக இயக்குநர் இயக்கிருந்தாலும், இப்படத்தின் ஒட்டுமொத்த யூனிட்டை அவர் கையாண்ட விதமும், நுணுக்கமாக படத்தை உருவாக்கியதும் பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

இப்பட ஷூட்டிங்கின் போது பெரும்பாலான நாட்கள் ஆந்தைகளைப் போல இரவு முழுவதும் முழித்திருந்து ஷூட்டிங்கை முடித்துவிட்டு, பகல் முழுவதும் ஒட்டுமொத்த டீமும் தூங்கியிருக்கிறது . இதற்குக் காரணம் படத்தின் கதை.

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மெனக்கெட்டிருக்கும் ‘டார்லிங் -2’ படத்தைப் பற்றி கேட்டதுமே, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அவருடைய பேனரில் படத்தை வெளியிட முடிவு செய்தார். இதன் மூலம் படத்தின் மீது அவர் கொண்டிருக்கும் நம்பிக்கையே முதல் வெற்றியாக அமைந்திருக்கிறது.

‘டார்லிங்-2’ படம் மிகப்பெரிய கமர்ஷியல் படமாக வெற்றிப் பெறும். இந்த வெற்றி என்னுடைய சினிமா கேரியரில் ஒரு நடிகராக என்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்றும் நம்புகிறேன்,” என்கிறார் கலையரன்.

Read Previous

Meendum Oru Kadhal Kathai – Mai Pottu Bytes

Read Next

‘வல்லவனுக்கும் வல்லவன்’ – டப்பிங் ஆரம்பம்