ரமீஸ் ராஜா நடிக்கும் ‘விதி மதி உல்டா’

‘டார்லிங் 2’ படத்தின் கதாநாயகன் ரமீஸ் ராஜா மீண்டும் கதாநாயகனாக நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் விஜய் பாலாஜி இயக்க ‘விதி மதி உல்டா’ என்ற வித்தியாசமான பெயரில் புதிய படத்தை ரைட் மீடியா ஒர்க்ஸ் (பி) லிமிடெட் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

மனித வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்துமே விதிக்குட்பட்டது. விதியை வெல்லக் கூடிய சக்தி மதிக்கு உண்டு. அதுவே உல்டாகிவிட்டால் என்ன விபரீதம் ஏற்படும் ?. அது தான் ‘விதி மதி உல்டா’ படத்தின் கதையாகும். இதை தன் காதல், காமெடி, ஃபேன்டஸி கலந்த த்ரில்லிங் படமாக உருவாக்கி வருகிறார்கள்.

கதாநாயகன் ரமீஸ் ராஜாவிற்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடித்து வருகிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி, கருணாகரன் நடித்து வருகிறார்கள். முக்கிய வேடத்தில் சென்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரி, பெங்களுர் போன்ற இடங்களில் நடந்து வருகிறது.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை விஜய் பாலாஜி இயக்கி வருகிறார்.

ஒளிப்பதிவு – மார்ட்டின் ஜோ, இசை – அஸ்வின், பாடல்கள் – கபிலன், எடிட்டிங் – புவன் ஸ்ரீனிவாசன், சண்டை – ஸ்டன்ட் ஷ்யாம், கலை – மைக்கேல் சேகர், தயாரிப்பு மேற்பார்வை – R.செல்லத்துரை,
தயாரிப்பு – ரமீஸ் ராஜா

Read Previous

Iraivi – Trailer

Read Next

சினிமா பின்னணியில் உருவாகும் ‘செய்’

Most Popular