வெர்ட்டிக்கல் பிலிம்ஸ் சார்பாக ராசிக், E.M. ஜபருல்லா, ரூபா ஐயப்பன், G.V. பாஸ்கர் இணைந்து தயாரிக்கும் படம் ‘கொள்ளிடம்’.
நேசம் முரளி இந்தப் படத்தை இயக்கி நாயகனாக அறிமுகமாமகிறார். லூதியா, ராசிக், வடிவுக்கரசி, ராமசந்திரன், வேல்முருகன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா படத்திற்கு இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் நேசம் முரளி கூறியதாவது,
“மனித இனத்துல இருபது சதவிதம் பேர் அழகா பிறக்கிறோம். மீதம் என்பது சதவிதம் பேர் அழகு குறைவாதான் பிறக்கிறோம்.
அழகு குறைவா இருக்குற என்பது சதவிதம் பேர் ஒருதலையாதான் காதலிக்கமுடியுது. காதலை சொல்ல நினைக்கும் போதெல்லாம் ‘இந்த மூஞ்சிக்கு இது தேவையான்னு’ நம்ம மனசாட்சியே கேள்வி கேட்டு கொலை பண்ணும், அந்த கொலைக்கு பேர்தான் ‘கொள்ளிடம்’,” என்கிறார்.
டெல்டா மாவட்டம் முழுவதும் இப்படத்தின் படபிடிப்பு நடைபெற்றுள்ளது. விரைவில் படம் திரைக்கு வருகிறது.