‘எந்திரன்’ சாதனையை முறிடியத்த ‘தெறி’

தமிழ்நாட்டில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதற்கு இப்போதைக்கு ஓரளவு விடை கிடைத்துள்ளது.

‘தெறி’ திரைப்படம் வெளிவந்து 25 நாட்களைக் கடந்துள்ளது. இந்த 25 நாட்களில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 65 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. அதில் வினியோகஸ்தர்களின் ‘ஷேர்’ ஆக மட்டும் சுமார் 55 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதுவரை ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படம் மட்டுமே 55 கோடி ரூபாயை வினியோகஸ்தர்களின் ‘ஷேர்’ ஆக வசூலித்த ஒரே படமாக இருந்தது. அந்த சாதனையை தற்போது ‘தெறி’ படம் முறியடித்துள்ளது.

விஜய் படம் படைத்த இந்த சாதனையை அடுத்து வர உள்ள ரஜினி படமான ‘கபாலி’ படம் முறியடிக்குமா என்பது அடுத்த கேள்வி ?.

Read Previous

Iraivi on 3 June

Read Next

Jumbulingam 3D – Official Trailer 1