தலைப்பில் உள்ளதைப் பார்த்ததும் ஏதோ ஒரு திரைப்படத்தில் நடந்த ஆக்ஷன் சம்பவம் என்று நினைத்து விட வேண்டாம்.
இது உண்மையிலேயே நடந்த சரியான ‘ஆக்ஷன்’ சம்பவம். நமது ஹீரோக்கள் வாய் நிறைய எந்த வஞ்சனையும் இல்லாமல் சொல்வார்கள், ஆனால் செய்ய மாட்டார்கள்.
அதை மாற்றி அதைச் செயலில் செய்து காட்டியிருக்கிறார் தெலுங்கு ஹீரோ மகேஷ் பாபு.
அவருடைய சொந்த கிராமமான ‘புர்ரிபள்ளம்’ என்ற ஊரை தத்தெடுத்து அந்த கிராமத்தை ஒரு ‘மாடல்’ கிராமமாக மாற்றிக் காட்டுவேன் என்று சபதமெடுத்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு அங்கு சென்ற மகேஷ் பாபு பெண்கள் நலக் குழுவினரிடம் 1 கோடி ரூபாய்க்கான காசோலையைக் கொடுத்துள்ளார்.
அதோடு அந்த கிராமத்தில் பள்ளிக் கட்டிடம், சாலை வசதி, குடி நீர் வசதி ஆகியவற்றிற்காக மொத்தமாக 2 கோடிக்கும் மேல் செலவு செய்ய உள்ளார்.
மகேஷ் பாபு செய்வதைப் போல நம்ம ஊர் அஜித்தும், விஜய்யும் செய்ய முன் வருவார்களா…?
சென்னை வெள்ளத்தின் போதே ஒரு ஆயிரம் கூடத் தராதவர்கள் இப்படி கோடி ரூபாய் செலவு செய்வார்களா என்ன ?.
சென்னை வெள்ளத்திற்கு மகேஷ் பாபு 10 லட்ச ரூபாய் கொடுத்து உதவினார்.
அஜித், விஜய் இருவருக்கும் அவரவர் படங்கள் 100 கோடி ரூபாய் வசூலித்தால் போதும்….