மிக மிக நல்ல மனிதன் ரஜினிகாந்த் – பாலகுமாரன் நெகிழ்ச்சி

இன்றைய இளம் படிப்பாளிகளுக்கு பாலகுமாரன் என்றால் யார் என்று தெரியமா என்பது சந்தேகம்தான். முதலில் இன்றைய இளம் தலைமுறையினர் படிக்கிறார்களா என்பதும் கேள்விதான்.

90களில் இருந்த இளம் தலைமுறையினர் கொண்டாடிய எழுத்தாளர் பாலகுமாரன். அவருடைய எத்தனையோ நாவல்கள் அப்போதைய இளம் தலைமுறையினரிடம் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

‘நாயகன், குணா, ஜென்டில்மேன், காதலன், பாட்ஷா, ஜீன்ஸ், முகவரி, மன்மதன், வல்லவன், புதுப்பேட்டை’ என பல படங்களில் அவருடைய எழுத்துக்களால் நம்மை ஆளுமை செய்திருக்கிறார்.

பாக்யராஜ் நாயகனாக நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தை இயக்கியிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார் பாலகுமாரன். நான்கு வருடங்கள் கழித்து நடந்த இந்த சந்திப்பு குறித்து பாலகுமாரன் அவருடைய முகப் புத்தகத்தில் எழுதியிருப்பதாவது,

“மிக மிக நல்ல மனிதன் என்று பல நூறு முறை ஒரு மனிதனைப் பற்றிச் சொல்ல வேண்டுமெனில் அது சூப்பர் ஸடார் ரஜினிகாந்தாத்தான் இருக்கும். வியாபார உத்தி வாழ்வு தந்திரம் உண்டென்றாலும இவையல்ல வாழ்க்கை என்பதும் அவருக்குத் தெளிவாய் தெரிந்திருக்கிறது.

என் காது சமீபமாய் மந்தித்திருக்கிறது. ஆயினும் பதினைந்து நிமிடப் பேச்சில் அன்பும் அக்கறையும் இருந்தன.

அந்த உயரத்திற்கு வாசல் வரை வந்து என் இனோவா கதவை திறக்க வேண்டியதில்லை. வந்தார் திறந்தார். படியிறங்க கைத்தாங்கினார். என் புத்தகங்கள் தந்தேன். மனம் பலமாய் நலமாய் இருப்பது சொன்னேன். தன் நலன் பற்றியும் பேசினார்.

நான்கு வருடங்கள் கழித்த சந்திப்பு. இனிமையாய் முடிந்தது. இதுதான் அழகு,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

ஜுலை 1ம் தேதி ‘கபாலி’ ரிலீஸ்

Read Next

Simbu lends his voice for Veera Sivaji