ஜுலை 1ம் தேதி ‘கபாலி’ ரிலீஸ்

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ஜான் விஜய், அட்டகத்தி தினேஷ், கலையரசன் மற்றும் பலர் நடித்துள்ள ‘கபாலி’ திரைப்படம் ஜுலை 1ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜுன் மாதம் முதல் வாரத்தில் படத்தின் இசை வெளியீட்டையும் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள்.

இதனிடையே ‘கபாலி’ டீசருக்குக் கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பால் படத்தின் வியாபாரமும் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தைத் தெலுங்கிலும் டப் செய்து வெளியிட உள்ளார்கள். தெலுங்கு டீசருக்கும் நேரடித் தெலுங்குப் படத்தைப் போல பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை எந்த ஒரு டப்பிங் படமும் போகாத விலைக்கு இப்படம் விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டீசர் ஏற்படுத்திய சாதனையை விட படத்தின் வசூல் மிகப் பெரிய சாதனையை இந்தியத் திரையுலகில் ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகமாக இருக்கம் என்பது உறுதி.

Read Previous

En Appa – Vishal

Read Next

மிக மிக நல்ல மனிதன் ரஜினிகாந்த் – பாலகுமாரன் நெகிழ்ச்சி