‘பாகுபலி 2’ எப்போது வருகிறது…?

எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பாகுபலி 2’ படம் எப்போது வரும் என்பது பற்றி அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாந நாளிலிருந்தே பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்தன.

தொலைக்காட்சி ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டி அளித்த ராஜமௌலி அது பற்றி தெரிவித்துள்ளார்.

“பாகுபலி’ படத்தின் முதல் பாகம் எடுக்கும் போதே இரண்டாம் பாகத்தின் 30 சதவீதத்தை எடுத்து முடித்துவிட்டோம்.

டிசம்பர் மாதத்தில் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமானதிலிருந்து இதுவரை 10 சதவீத படப்பிடிப்புகளை முடித்துள்ளோம். ஆக மொத்தம் 40 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

திட்டமிட்டபடி படப்பிடிப்பு நிறைவடைந்தால் இந்த ஆண்டின் இறுதியில் ‘பாகுபலி 2’ படம் வெளிவரும். இல்லையென்றால் 2017ம் ஆண்டின் துவக்கத்திலேயே படத்தை வெளியிட முயற்சிப்போம்,” என்று தெரிவித்துள்ளார்.

‘பாகுபலி’யை கட்டப்பா ஏன் கொன்றார் என்பதற்கான விடை இரண்டாம் பாகத்தில் தான் வரப்போகிறது என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Read Previous

Watch Dhilluku Dhuddu teaser tomorrow

Read Next

Karunas, Chandrasekhar win assembly election