‘ஒன்பதிலிருந்து பத்து வரை’ – இயக்குனரின் சவால்

ஹீரோ சினிமாஸ் தயாரிப்பில் விஜய் சண்முகவேல் ஐயனார் இயக்கத்தில் கார்த்திக் இசையமைப்பில் கதிர், ஸ்வப்னா மேனன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘ஒன்பதிலிருந்து பத்து வரை’.

இயக்குனர் பாக்கியராஜிடம் உதவியாளராகப் பணியாற்றிய விஜய் சண்முகவேல் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் பற்றி தைரியமாக நம் முன் ஒரு சவாலை வைக்கிறார்.

“இப்படம் சென்னையில் ஆரம்பித்து காஞ்சிபுரம் வரை செல்லும் ஒரு பயணக் கதை. காரில் பயணிக்கும் நாயகனுக்கும், நாயகிக்கும் இடையிலான விஷயங்கள், அதில் உள்ள திருப்பங்கள் ஆகியவைதான் படம்.

ஒரு த்ரில்லர் கதையான இதில் திரைக்கதை மிகவும் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை யாராலும் சொல்ல முடியாது.

யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவு படத்தில் உண்டு. அதை படம் பார்க்கும் ரசிகர்களால் கண்டிப்பாக யூகிக்கவே முடியாது. அப்படி யாராவது படம் பார்க்கும் போதே படத்தின் முடிவு என்ன என்பதைச் சொல்லிவிட்டால், நான் ‘மொட்டை’ அடித்துக் கொள்கிறேன்,” என நம்பிக்கையுடன் சவால் விடுகிறார்.

‘ஒன்பதிலிருந்து பத்து வரை’ அடுத்த வாரம் ஜுலை 1ம் தேதி வெளியாகிறது.

Read Previous

ரசிர்களைக் கவர்ந்த ‘ரெமோ’ முதல் பார்வை

Read Next

En Appa – Actor JayamRavi