வெளிநாட்டு உரிமை, எந்த ஹீரோ முதலிடம் ?

தமிழ்த் திரையுலகத்தில் தமிழ்நாட்டில் படம் ஓடுகிறதோ இல்லையோ வெளிநாட்டில் எங்களது படங்களுக்கு இவ்வளவு வசூல் என சில ஹீரோக்களின் ரசிகர்கள் ஆஹா, ஓஹோவென புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

உலக அளவில் எந்த ஹீரோவுக்கு வசூலில் முதலிடம் என்பது இன்றைய அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் எழுந்து வருகிறது.

தமிழ்ப் படங்களை வெளிநாடுகளில் வாங்கி அதிக அளவில் வெளியிடும் நிறுவனம் ஒன்று எந்த ஹீரோவுக்கு எவ்வளவு வெளிநாட்டு உரிமை என்ற தகவலைத் தெரிவித்துள்ளது.

அதன்படி, ரஜினிகாந்த் படங்களின் வெளிநாட்டு உரிமை 30 கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் விஜய் 22 கோடி ரூபாயுடன் இருக்கிறார். தமிழ்நாட்டில் விஜய்க்குப் போட்டியாக இருக்கும் அஜித் படங்களின் வெளிநாட்டு உரிமை வெறும் 8 கோடி ரூபாய் மட்டுமே இருந்து 6வது இடத்தில் உள்ளார்.

சூர்யா – 20 கோடியுடன் 3வது இடத்திலும், கமல்ஹா4ன் 15 கோடி ரூபாயுடன் 4வது இடத்திலும், சிவகார்த்திகேயன் 10 கோடியுடன் 5வது இடத்திலும், விக்ரம் 7 கோடியுடன் 7வது இடத்திலும் சிம்பு 6 கோடி ரூபாயுடன் 8வது இடத்திலும் உள்ளார்.

சிவகார்த்திகேயனை விட அஜித் பின்னால் இருப்பது அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரக் கூடிய தகவல் ஆகும்.

Read Previous

Ivan Yarendru Therikiratha – Official Trailer

Read Next

மெட்ரோ – விமர்சனம்