ரெமோ – சிங்கப்பூரில் ‘செஞ்சிட்டாளே…’ சிங்கிள் ரிலீஸ்

24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ‘ரெமோ’ படத்தின் தீம் பாடல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

அடுத்து வரும் ஜுலை 1ம் தேதி இப்படத்தின் ‘செஞ்சிட்டாளே…’ பாடல் சிங்கப்பூரில் வெளியிடப்பட உள்ளது.

அங்கு நடைபெற உள்ள விருது வழங்கும் விழா ஒன்றில் இப்பாடலை வெளியிட உள்ளார்கள்.

அந்த விழாவில்  தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளார்கள்.

Read Previous

25வது ஆண்டில் ‘அண்ணாமலை’ – குஷ்பு நெகிழ்ச்சி

Read Next

‘வட சென்னை’ குழு பற்றி விரைவில் அறிவிப்பு