‘வட சென்னை’ குழு பற்றி விரைவில் அறிவிப்பு

‘பொல்லாதவன், ஆடுகளம்’ படங்களுக்குப் பிறகு இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் இணையும் ‘வட சென்னை’ படம் கடந்த வாரம் பூஜையுடன் ஆரம்பமானது.

இப்படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். மற்ற கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது பற்றி இதுவரை எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘வட சென்னை’ படத்திற்காக தற்போது பிரம்மாண்டமான ஜெயில் செட் ஒன்று சென்னையில் அமைக்கப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

3 பாகங்களாக ‘வட சென்னை’ உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகைகள், குழுவினர் பற்றி விரைவில் அறிவிக்கிறோம்,” என படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் தெரிவித்துள்ளார்.

Read Previous

ரெமோ – சிங்கப்பூரில் ‘செஞ்சிட்டாளே…’ சிங்கிள் ரிலீஸ்

Read Next

Amma Kanakku – Maths Tough – Official Video Song