அஜித் ஜோடியாக மீண்டும் அனுஷ்கா ?

சிவா இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது.

இப்படத்தில் அஜித் ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பது நீண்ட நாட்களாகவே பேசப்பட்டு வந்தது. பலரும் அந்த வாய்ப்புக்கு தூது விட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

தற்போது அஜித் ஜோடியாக நடிக்க அனுஷ்கா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித் ஜோடியாக அனுஷ்கா ஏற்கெனவே நடித்திருந்தார். தற்போது மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.

அனுஷ்கா தற்போது தமிழில் சூர்யாவுடன் ‘எஸ் 3’ படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

Read Previous

What is Priya Anand’s next ?

Read Next

மகேஷ்பாபு , ஏ.ஆர்.முருகதாஸ் படம் அடுத்த மாதம் ஆரம்பம்