சுந்தர் .சி படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை

தமிழ்த் திரையுலகத்தின் ராசியான தயாரிப்பு நிறுவனமாகவும், வினியோக நிறுவனமாகவும் விளங்கி வரும் நிறுவனம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.

பல வெற்றிப் படங்களை தயாரித்தும், வினியோகம் செய்து வரும் இந்நிறுவனம் அடுத்து பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ள படத்தை சுந்தர் .சி இயக்க உள்ளார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கப் போகிறார் என கடந்த சில நாட்களாகவே தகவல் வெளிவந்து கொண்டிருந்தது.

அந்தத் தகவலை தற்போது ஏ.ஆர்.ரகுமான் உறுதி செய்துள்ளார். சற்று நேரத்திற்கு முன் அவருடைய டிவிட்டர் தளத்தில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

“சுந்தர் . சி இயக்க உள்ள, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது லட்சியப் படைப்பிற்கு இசையமைப்பது பெரு மகிழ்ச்சி. குழுவினருக்கு என்னுடைய இனிய வாழ்த்துகள்,” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகும் அதிர்ஷ்டசாலி யார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

ஏ.ஆர். ரகுமான் இசை என்றதும், இதற்கு முன் நடிக்கத் தயங்கிய சில ஹீரோக்கள் கூட இனி தானாகவே நடிக்க முன் வருவார்கள்.

Read Previous

Yaakkai – Solli Tholaiyen Ma – Song Teaser

Read Next

Dhilluku Dhuddu Movie Review