மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் கார்த்தி, அதிதி ராவ் ஹைதாரி நடிக்கும் ‘காற்று வெளியிடை’ படம் ஊட்டியில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமாகும் அதிதி ராவ், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்.
சுமார் 9 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்க வந்துள்ள அதிதி மணிரத்னம் படத்திற்காக கடந்த ஒரு மாத காலமாகவே தமிழைக் கற்று வருகிறாராம்.
படப்பிடிப்பிலும் மணிரத்னம் எப்படிப் பேச வேண்டும் என தமிழாசிரியரைப் போல தெள்ளத் தெளிவாக சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாராம்.
படப்பிடிப்பு முடிவதற்குள் அவர் நன்றாக தமிழ் பேச கற்றுக் கொள்வார் என்கிறார்கள்.
ஹன்சிகா, காஜல் அகர்வால், ஸ்ரேயா தமிழில் நடிக்க வந்து இத்தனை ஆண்டு காலமாகியும் இன்னும் தமிழில் பேச எந்த முயற்சியும் எடுக்காமல் இருக்கிறார்கள்.
மணிரத்னம் படத்தில் நடித்தால் மட்டுமே கற்றுக் கொள்வார்களோ…?