தமிழில் படங்கள் இல்லை, தெலுங்குக்குப் போன ஹன்சிகா

தமிழ்த் திரையுலகில் கடந்த மூன்று வருடங்களாக பல படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, அஜித் தவிர இன்றைய முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடித்துவிட்டார்.

தற்போது ஜெயம் ரவியுடன் ‘போகன்’ படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் முடிவடையும் நிலையில் உள்ளது. புதிதாக வேறு எந்தத் தமிழ்ப் படங்களும் அவரைத் தேடி வராத நிலையில் மீண்டும் தெலுங்குப் படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

‘ஜெயம்’ படத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் தெலுங்கில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அவர் நடித்து நாயகனாக நடிக்க உள்ள படத்தில்தான் ஹன்சிகா நாயகியாக நடிக்க சம்மதித்துள்ளார். அந்தப் படத்தில் ‘மெட்ராஸ்’ பட நாயகி கேத்தரின் தெரேசாவும் மற்றொரு நாயகியாக நடிக்கப் போகிறார்.

மூன்று வருடங்களாக முன்னணியில் இருந்த ஹீரோயினுக்கு புதிய வாய்ப்புகள் வராதது ஆச்சரியமாக உள்ளது.

 

Read Previous

தமிழ் கற்று நடிக்கும் மணிரத்னம் நாயகி !

Read Next

‘கபாலி’ – அமெரிக்காவில் 460 தியேட்டர்களில் ரிலீஸ்