‘கபாலி’ – அமெரிக்காவில் 460 தியேட்டர்களில் ரிலீஸ்

தமிழ்நாடு தவிர ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தமிழ்ப் படங்களுக்கு அதிகமான வரவேற்பு உள்ளது.

இந்தியாவில் வட மாநிலங்களில் வரும் வசூலை விட அமெரிக்காவில் தமிழ்ப் படங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பும், வசூலும் அதிகமாகவே இருக்கும்.

‘கபாலி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலாய் என நான்கு மொழிகளில் உலக அளவில்வெ ளியாகிறது. அமெரிக்காவில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் படம் வெளியாகிறது.

அமெரிக்காவில் ‘கபாலி’ – தமிழ், 237 தியேட்டர்களிலும், ‘கபாலி- தெலுங்கு 227 தியேட்டர்களிலும், மொத்தமாக 460 தியேட்டர்களில் வெளியாகிறது.

அதோடு 21ம் தேதி பல தியேட்டர்களில் பிரிமீயர் காட்சிகளும் நடைபெறுகிறது.

‘கபாலி’ படத்தின் வசூல் ஹிந்திப் படங்களின் வசூலை மிஞ்சும் அளவிற்கு அமெரிக்காவில் இருக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Read Previous

தமிழில் படங்கள் இல்லை, தெலுங்குக்குப் போன ஹன்சிகா

Read Next

Dhanush’s Telugu encounter