மீண்டும் மணிகண்டன் – சந்தானம் கூட்டணி

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மணிகண்டன்.

2013ம் ஆண்டு வெளிவந்த அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக சந்தானம் நடித்திருந்தார்.

அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒரு இடைவெளிக்குப் பின் மணிகண்டன் – சந்தானம் கூட்டணி மீண்டும் இணைகிறது.

இந்தப் படத்தை வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

குடும்பத்துப் பின்னணியில் முழு நீள நகைச்சுவைப் படமாக தயாராக உள்ள இப்படத்தின் மற்ற நட்சத்திரத் தேர்வு, தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தற்போது நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் நாயகனாக அறிமுகமாகும் ‘ஒரு பக்கக் கதை’ படத்தைத் தயாரித்து வருகிறது.

Read Previous

Maayavan Teaser

Read Next

Dharmadurai Official Trailer