வேகமாக வளரும் ‘விதி மதி உல்டா’…

ரைட் மீடியா ஒர்க்ஸ் (பி) லிமிடெட் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வரும் படம் ‘விதி மதி உல்டா’.

‘டார்லிங் 2’ படத்தின் கதாநாயகன் ரமீஸ் ராஜா கதாநாயகனாக நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் விஜய் பாலாஜி இயக்கி வருகிறார்.

மனித வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்துமே விதிக்குட்பட்டது. விதியை வெல்லக் கூடிய சக்தி மதிக்கு உண்டு. அதுவே உல்டாகிவிட்டால் என்ன விபரீதம் ஏற்படும் ?. அது தான் ‘விதி மதி உல்டா’ படத்தின் கதையாகும். இதை தன் காதல், காமெடி, ஃபேன்டஸி கலந்த த்ரில்லிங் படமாக உருவாக்கி வருகிறார்கள்.

கதாநாயகன் ரமீஸ் ராஜாவிற்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடித்து வருகிறார். வித்தியாசமான கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி, கருணாகரன், முக்கிய வேடத்தில் சென்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்திற்காக அஸ்வின் இசையமைப்பில் ஜி.வி.பிரகாஷ் பாடிய “தாறுமாறா ஒரு பார்வை…” என்ற பாடலை படத்தின் நாயகன் ரமீஸ் ராஜா, நாயகி ஜனனி ஐயர் ஆகியோர் நடிக்க பாண்டிச்சேரியில் படமாக்கினார்கள்.

கானா பாலா, அந்தோணி தாஸ் இணைந்து பாடிய “நான்தான்டா மாஸ்…” என்ற பாடலை ரமீஸ்ராஜா, டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ராயன் ஆகியோர் குத்தாட்டம் போட்டு ஆட படமாக்கினார்கள்.

படம் மிகவும் அருமையாக வளர்ந்து வருவதாக படக் குழுவினர் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது.

Read Previous

Why so many delays for Thodari ?

Read Next

Success grand success, say Iru Mugan unit