லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தை “தூங்கா நகரம், சிகரம் தொடு” படங்களை இயக்கிய கௌரவ் நாராயணன் தற்போது இயக்குகிறார்.
தொடர் வெற்றிப் படங்களை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படம் இது.
உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் பிரபல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
சிகரம் தொடு படத்திற்கு பின் இசையமைப்பாளர் டி.இமான் மீண்டும் கௌரவ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றுகிறார். டிமான்டி காலனி படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய அரவிந்த்சிங் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு நேற்று இனிதே நடைபெற்றது.
இப்படத்தின் தலைப்பு மற்ற நடிகர் நடிகையர் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்
எழுத்து இயக்கம் – கௌரவ் நாராயணன்
தயாரிப்பு – லைகா புரொடக்ஷன்ஸ்
இசை – டி.இமான்
ஒளிப்பதிவு – அரவிந்த்சிங்
கலை – விதேஷ்
படத்தொகுப்பு – KL. பிரவீன்
சண்டைப்பயிற்சி – திலிப் சுப்பராயன்
மக்கள் தொடர்பு – நிகில்
தயாரிப்பு நிர்வாகம் – வெங்கட்.K
நிர்வாக தயாரிப்பு – S.பிரேம்