அம்மணி – இரு பெண்மணிகளின் வாழ்க்கை

‘டேக் என்டர்டைன்மெண்ட்’ சார்பில் வெண் கோவிந்தா தயாரித்திருக்கும் படம் ‘அம்மணி’.

‘சாலம்மா’ என்ற 57 வயது பெண் மற்றும் ‘அம்மணி’ என்ற 82 வயது பெண் கதாப்பாத்திரங்களை மையமாகக் கொண்ட ஒரு படமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ‘சாலம்மா’ கதாப்பாத்திரத்திலும், விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவின் பாட்டியாக நடித்த சுப்புலட்சுமி ‘அம்மணி’ கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

நிதின் சத்யா, ரோபோ ஷங்கர், ஜார்ஜ் மரியான், ஸ்ரீ பாலாஜி, ரெஜின் ரோஸ், சி ரேணுகா, எஸ் அன்னம் ஆகியோரும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

“அம்மணி கதையை படிக்கும் போது நான் ஒரு நாவலை படிப்பது போல தான் உணர்ந்தேன். அந்த அளவிற்கு இந்தக் கதை சுவாரசியமாக இருந்தது. வெறும் ஒரு பொழுது போக்கு திரைப்படம் என்பதை தாண்டி பல சிறப்பம்சங்கள் எங்களின் ‘அம்மணி’ படத்தில் இருக்கிறது,” என்கிறார் தயாரிப்பாளர் வெண் கோவிந்தா.

“அம்மணி’ திரைப்படம் பெண்கள் மட்டுமில்லாமல் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பொதுவான படமாக விளங்கும். வாழ்க்கையில் சிறப்பாக வாழ வேண்டும் என்று தான் அனைவரும் நினைப்பார்கள். ஆனால், தன்னுடைய மரணம் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி யோசிக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை தான் ‘அம்மணி’.

எங்களின் ‘அம்மணி’ படத்தை மறைந்த கவிஞர் நா. முத்துக்குமார் அவர்களுக்கு நாங்கள் சமர்ப்பணம் செய்கிறோம்.

‘அம்மணி’ படத்திற்காக அவர் எழுதித் தந்திருக்கும் பாடல்கள் ஒவ்வொன்றும் காவியம். ‘லைஃபே மச்சான் மச்சான்… ஒரு ப்ரீபெய்டு போனு…’ என்னும் பாடல் மூலம் வாழ்க்கையின் அர்த்தத்தை இன்றைய கால தத்துவத்தோடு ஒன்றிணைத்து மிக அழகாக சொல்லி இருக்கிறார் நா முத்துக்குமார்.

நிச்சயமாக எங்களின் ‘அம்மணி’ திரைப்படம் ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதியும்,” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் படத்தின் இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

‘அம்மணி’ படம் அக்டோபர் 14ம் தேதி வெளியாக உள்ளது.

Read Previous

உதயநிதி – மஞ்சிமா மோகன் படம் ஆரம்பம்…

Read Next

Sasikumar gets going