‘அச்சம் என்பது மடமையடா’ வெளியீட்டுக்குத் தயார் ?

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திற்குப் பிறகு கௌதம் மேனன் – ஏ.ஆர்.ரகுமான் – சிம்பு மீண்டும் இணைந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படம் எப்போதோ ஆரம்பமானது.

தள்ளிப் தள்ளிப் போய் ஒரு வழியாக தற்போது வெளியீட்டுக்குத் தயாராகி விட்டது. செப்டம்பர் வெளியீடு என்று முதலில் அறிவித்துவிட்டு பின் திடீரென படத்தின் வெளியீட்டுத் தேதியைப் பற்றி எதுவுமே சொல்லாமல் அமைதி காத்து வந்தார்கள்.

இதனிடையே படத்தின் புதிய டிரைலர் ஒன்றை நேற்று வெளியிட்டார்கள். அதில் படம் நவம்பர் மாதம் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்கள்.

இருந்தாலும் சில குறும்புக்கார ரசிகர்கள் “மாதத்தை சொன்னீர்களே, வருடத்தைச் சொன்னீர்களா,” என யு டியூப் கமெண்ட் பகுதியில் கிண்டல் அடித்துள்ளார்கள்.

ஆனாலும், சிம்பு ரசிகர்கள் நேற்று டிரைலர் வெளியானதை டிவிட்டரில் உடனடியாக டிரென்டிங்கில் கொண்டு வந்துவிட்டார்கள்.

Read Previous

Achcham Yenbadhu Madamaiyada Trailer #2

Read Next

பிறந்தநாள் கொண்டாட வேண்டாம், கமல்ஹாசன் வேண்டுகோள்