பிறந்தநாள் கொண்டாட வேண்டாம், கமல்ஹாசன் வேண்டுகோள்

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய அலுவலகத்தில் மாடியிலிருந்து தவறி விழுந்ததால் கடந்த சில மாதங்களாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.

அவர் இயக்கம், நடிப்பில் உருவாகிவரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பையும் தள்ளி வைத்துவிட்டார். அவர் உடல்நிலை முழு தகுதியடைந்த பின்தான் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

இதனிடையே வரும் நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் பிறந்த நாள் வரவிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அவருடைய ரசிகர்கள் கமல்ஹாசனின் பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“நற்பணி இயக்கத் தோழர்கட்கோரரிக்கை. தமிழக முதல்வரின் உடல்நலம் இவ்வாறிருக்க, என் பிறந்தநாள் விழாக்களைத் கண்டிப்பாய்த் தவிர்க்க வேணடுகிறேன்,” என தமிழில் தப்பும் தவறுமாக தன்னுடைய டிவிட்டரில் தன் வேண்டுகோளைப் பதிவு செய்துள்ளார்.

தமிழக முதல்வர் விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வரும் நிலையில் கமல்ஹாசனின் இந்த வேண்டுகோள் அவருடைய ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

‘அச்சம் என்பது மடமையடா’ வெளியீட்டுக்குத் தயார் ?

Read Next

‘பைரவா’ – அதிக விலைக்கு விற்கப்பட்ட யு.எஸ். உரிமை